இறைவனின் சொந்த நாடென்று அழைக்கப்படும் கேரளா உணவின் பாரம்பரியத்தை சற்றும் அழிக்காமல் அல்லது தனக்கென்று உரிய மகத்துவத்தை குறைக்காமல் அதை தலைமுறை தலைமுறையாய் பாதுகாத்து வருகிறது.
கேரள உணவின் ருசிக்கு இன்றியமையாததாக அமைவது சேர்க்கப்படும் பொருட்கள் எனவே அவை எல்லாவற்றையும் அங்கிருந்தே வரவழைத்து உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளா என்றவுடன் நினைவுக்கு வருபவை பச்சை பசேல் தோட்டங்கள், உயர வளர்ந்திருக்கும் தென்னை மற்றும் பனை மரங்கள், கட்டு மரங்கள், மீன் பிடி வளையங்கள், கப்பல் வீடு மற்றும் பல. இவை அனைத்தையும் ஈடு கட்டும் வண்ணம் "என்டே கேரளம்" தன் பாரம்பரிய உணவால் கேரளாவை இங்கு அழைத்துள்ளது.
ஆகவே உங்கள் அனைவரையும் வருகை தந்து மன ரம்மியத்துடன் ருசியாக சமைத்து பரிமாறப்படும் உணவை ருசித்து மகிழ அழைக்கிறோம்.
கண்ணெதிரே தயாரிக்கப்படும் ஆப்பம், தலைசேரியின் திரிசூர் மற்றும் பாலக்காட்டின் சைவ உணவு வகைகள், சிறிய கிறிஸ்தவர்களின் மீன் குழம்பு வகைகள் நாக்கின் சுவையை சுண்டி இழுக்கும்.
* கரிமீன் பொளிச்சது,
* திருவனந்தபுரத்தின் கோழி வறுவல்,
* வாழைப்பூ வடைகள்,
* கருமிளகிட்ட காளான்,
* பிரியாணி வகைகள்,
* பரோட்டா ஆப்பத்துடன் உண்டு ருசிக்க கூடிய ஆட்டிறைச்சி குழம்பு,
* உலர்த்திய இரைச்சி,
* மீன் மோளி,
* பால் அட பாயாசம் இவையாவும் பார்க்கும் போதே பசியை தூண்டி ருசிக்க வைக்கும்.
வாரீர்! கேரளத்தை அனுபவித்து ருசித்து மகிழ்வீர்!
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-Hotels-04-09-17]