மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி பாராளுமன்றத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஒவ்வொரு மாதமும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை ரூ.4 வீதம் உயர்த்தும்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது.
கடந்த மாதம் ரூ.4 உயர்த்துவதற்கு பதிலாக ரூ.2.31 மட்டுமே உயர்த்தியதால், அந்த இழப்பை சரிக்கட்டும் வகையில் இப்போது சிலிண்டருக்கு 7 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.479.77-ல் இருந்து 487.18 ரூபாயாகி உள்ளது. அதாவது ஒரு சிலிண்டரின் விலை 7.41 ரூபாய் உயர்ந்துள்ளது.
மானியம் இல்லா கியாஸ் சிலிண்டர் விலை ரூ.74 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இந்த சிலிண்டர் விலை ரூ.524-ல் இருந்து ரூ.597.50 ஆகி உள்ளது.