Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

புதிய சாதனை படைத்துள்ள 'ஜம்ப் கட்ஸ்'

$
0
0

தமிழ் டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் 'ஜம்ப் கட்ஸ்' என்ற புதிய பாணியை கையாண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தியது நரேஷ்-ஹரி கூட்டணி. இந்த பாணியை கையாள்வதால் தங்கள் சேனலிற்கு 'ஜம்ப் கட்ஸ்' என்று பெயரிட்டனர். 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த இணையதள சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்பொழுது 5 லட்சத்தை தொட்டுள்ளது.

லயோலா கலோரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து பட்டம் பெற்ற ஹரி மற்றும் நரேஷின் இந்த விடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஜிட்டல் வீடியோ உலகின் முன்னோடியாக இந்த 'ஜம்ப் கட்ஸ்' கருதப்படுகிறது. இவர்கள் இருவரின் அபார திறமை இவர்களுக்கு பெரும் பல வாய்ப்புகளை கொண்டவந்தவண்ணமுள்ளது.

இது குறித்து இவர்களின் டிஜிட்டல் பார்ட்னரான 'டிவோ' நிறுவன இயக்குனர் ஷாஹிர் முனீர் பேசுகையில், ''இவ்வளவு குறுகிய காலத்திலேயே இவர்கள் ஐந்து லட்சம் சந்தாதாரர்கள் பெற்றிருப்பது மிக பெரிய சாதனையாகும். பத்தே மாதங்களில் வெறும் முப்பதே விடியோக்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளள சாதனை இது. இந்த டிஜிட்டல் மார்க்கெட் உலகில் தென்னிந்தியாவில் இந்த சாதனையை இதுவரை யாரும் செய்ததில்லை. சினிமாவின் உச்ச நட்சத்திரங்களால் மட்டுமே சாதிக்கக்கூடிய பல லட்சம் வியூஸை இவர்கள் தங்கள் விடியோக்கள் மூலமாக தொட்டுள்ளனர். தாங்களே எழுதி உருவாக்கும் இந்த விடியோக்களுக்கு கிடைக்கும் இந்த வியூக்கள், தாங்கள் எதுவும் உருவாக்காமல் வெறும் ரிலீஸ் மட்டும் செய்து பல லட்சம் வியூக்களை வாங்கும் பல இந்தி டிஜிட்டல் சேனல்களை விட மிக பெரிதாகும்''.

Jumpcuts creates new history


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles