SRM பல்கலைக்கழகம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து காட்டாங்குளத்தூர் வளாகத்தில் 03.08.2017 அன்று ‘‘ஜப்பான் உயர் கல்விக் கண்காட்சி’’யை நடத்தியது. இது ஜப்பானில் கிடைக்கின்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளையும் அந்தக் கிழக்காசிய நாட்டில் படிக்கிற மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கல்வி உதவித் தொகை மற்றும் திட்டங்களையும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் நடத்தப்பட்டது. கல்வி, பண்பாடு, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம், டோக்கியோ பல்கலைக்கழகத்தை ஜப்பானில் படிப்புக்கான ஒருங்கிணைப்பாளராக ஏற்பளித்துள்ளது.
இந்தியாவும் ஜப்பானும் இந்திய மாணவர்களை ஜப்பானில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ஈர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இவ்விரு நாடுகளின் தலைமை அமைச்சர்களும் அண்மையில் சந்தித்து உறவுகளை வலுப்படுத்திக் கொண்டனர். இச்சந்திப்பு உயர்கல்வியில் ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகளுக்குப் பயனாக இருந்தது. இதை மேலும் வலுப்படுத்துவதன் தேவையும் வலியுறுத்தப்பட்டது.
பல்கலைக்கழகங்களுக்கிடையே தொடர்பை விரிவுபடுத்துவதன் வழியாக ஜப்பானின் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்திற்கு இந்தியாவுடன் கல்வி உறவுகளைக் கட்டமைக்க ஏற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அது இத்தகைய கண்காட்சியை நடத்த SRM பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டது.
SRM பல்கலைக்கழகம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஜப்பானுடன் ஒத்துழைத்து வருகிறது. அது ஜப்பானின் சிசுகா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கடந்த 10 ஆண்டுகளில் SRM மாணவர்களும் பேராசிரியர்களும் 80க்கும் மேற்பட்ட முறை அந்நாட்டுக்குச் சென்று வந்தார்கள்.
இது மிக வெற்றிவயமான ஒத்துழைப்பில் ஒன்றாகும். இதற்கு முக்கியமானவரான பேராசிரியர் அயக்கலா சிறப்புரை ஆற்றினார். SRM பல்கலைக்கழகம் ஆசிய மீச் சிறுநுண்(நானோ) தொழில்நுட்பவியல் அமைப்பை நிறுவிய உறுப்பினர்களில் ஒன்றாகும்.
SRM பல்கலைக்கழகம் ஜப்பானிலுள்ள யுஷு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஐப்பானிய அறிவியலறிஞர் மற்றும் பொறிஞர் ஒன்றியம், டோக்கை பல்கலைக்கழகம், NEC நிறுவனம், சிசுகோ பல்கலைக்கழகம் மற்றும் வசிடா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்புகள் மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் நன்கு செயற்பாட்டிலுள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறைத் தொடர்பானவற்றில் உரிய ஆய்வுகளைச் செய்வதற்கும், வளர்ப்பதற்கும், ஜப்பான் NEC நிறுவனம் SRM பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டு ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைத்துள்ளது. இவ்வாறே வசீடா பல்கலைக்கழகமும் SRM ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
மேலும் SRM குழுமமான SRM டெக்னாலாஜிஸ், தொழில் ஆராய்ச்சியில் பல ஜப்பான் குழுமங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. இதற்காக டோக்யோவில் ஓர் அலுவலகத்தை அது வைத்துள்ளது.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Japan-03-08-17]