இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி சென்றால் முகுந்தராயர் சத்திரத்திலேயே நம் வாகனங்களை நிறுத்தி விடுவார்கள். இதற்கு மேல் போர் வீல் டிரைவ் கொண்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். காரணம் 53 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கோர புயலில் ஒட்டுமொத்த தனுஷ்கோடி நகரமே அழிந்ததோடு அந்தப் பகுதியும் சேரும் சகதியுமாக பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டது.
சாதாரண வாகனங்களில் சென்றால் சகதிக்குள் சிக்கிவிடும் அபாயம் உள்ளது. ஃபோர் வீல் டிரைவ் வாகனங்களில் சென்றாலும் அவையும் சகதிகளில் சிக்கும், ஆனாலும் அந்த வாகனத்தின் நான்கு சக்கரங்களுக்கும் டார்க் எனப்படும் சக்தி தரப்படுவதால், சகதியில் சிக்கினாலும் மீண்டுவிடும்.
இப்போது இந்த இடர்பாடுகளை எல்லாம் களைந்து அந்தப் பகுதிக்கு எல்லா விதமான வாகனங்களும் செல்லும் படியாக,9.5 கிமீ நீளத்திற்கு அட்டகாசமாகப் புதிய சாலையைப் போட்டுள்ளார்கள். அது தேசிய நெடுஞ்சாலை 87 என பெயரிடப்பட்டுள்ளது.
இதோ இன்று மோடி இந்த சாலையை திறந்து வைத்து விட்டார். இராமேஸ்வரம் டூ அரிச்சல்முனை வரையிலான அந்த சாலை உள்ளபடியே ஒரு பெரும் அதிசயம் தான்...
குடும்பத்துடன் சென்று வாருங்கள்...