சென்னை:தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையை அமைச்சர்கள் விமர்சனம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: " விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ‘குதிரை பேர’ அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது. இந்த ஊழல் அரசுக்கு கமல்ஹாசன் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.