Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

‘ரோட் டு ஸ்கூல்’

$
0
0

அசோக் லேலேண்ட், தனது ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 45 பள்ளிக்கூடங்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது!

* நாமக்கல், மோகனூர், பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஆகிய நான்கு கல்விப்பகுதிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

* அசோக் லேலேண்டின் ’ரோட் டு ஸ்கூல்’ திட்டம் மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4,700 மாணவர்கள் பலனடைவார்கள்.

* ’ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது இந்த வருடம் 19,700 மாணவர்களைச் சென்றடையும்.

நாமக்கல், தமிழ்நாடு, ஜூலை 2017: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் இரண்டாவது மாபெரும் கமர்ஷியல் வாகன உற்பத்தி  (commercial vehicle - CV) நிறுவனமுமான அசோக் லேலேண்ட், இன்று தனது பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு திட்டங்களில் ஒன்றான ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 45  பள்ளிக்கூடங்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ’சூளகிரி’ மற்றும் ’அஞ்செட்டி’, திருவள்ளூர் மாவட்டம் ‘புழல்’ மற்றும் ‘மீஞ்சூர்’ கல்விப் பகுதிகளைத் தொடர்ந்து, அசோக் லேலேண்ட் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் நாமக்கல், மோகனூர், பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஆகிய நான்கு கல்விப் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்வியை மேம்படுத்தும் விதமாக தனது ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இத்திட்டம் 4,700 மாணவர்கள் என்ற நிலையில் இருந்து இந்த வருடத்திற்குள் 19,700 மாணவர்களைச் சென்றடையும்.

’ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் இந்த அருமையான தருணத்தில் பேசிய அசோக் லேலேண்ட்டின் நிர்வாக இயக்குநர் திரு. வினோத் கே தாசரி(Mr. Vinod K. Dasari, Managing Director, Ashok Leyland Ltd.), "அசோக் லேலேண்ட் மற்றும் என்னைப் பொறுத்தவரை சமுதாயத்தை ஏற்றத்தாழ்வில்லாமல் சமநிலைப்படுத்தும் ஒரு அருமையான விஷயம் கல்வி என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நம்மால் முடிந்தது, எதிர்க்கால தலைமுறைக்கு கல்வி கற்க உதவிப்புரிவது. அதன்மூலம் அவர்களை கல்வியறிவுள்ள இந்திய குடிமக்களாக உருவாக்க முடியும். இந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக, பத்தாண்டுகளுக்கு முன்பாக அசோக் லேலேண்ட் கல்வித்துறையில் தன்னுடைய பங்களிப்பை ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டம் மூலம் உற்சாகமாக ஆரம்பித்தது.

‘ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது ’சூளகிரி’ மற்றும் ’அஞ்செட்டி’ பகுதிகளில் ஆரம்பமானது. இன்று இத்திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக, மேலும் கூடுதலாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 45 பள்ளிக்கூடங்களை சேர்த்து ’ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம். எங்களால் முடிந்த இந்த சிறு முயற்சியால், 4,700 மாணவர்களிடம் ஒரு அருமையான, சமூகத்திற்கு அவசியமான ஒரு நல்ல மாற்றத்தை எங்களால் உருவாக்க முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.’’ என்றார்.

இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்,  அசோக் லேலேண்ட்டின் மனிதவளம், கம்யூனிகேஷன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகள் பிரிவின் தலைவர் திரு. என்.வி. பாலச்சந்தர்(Mr. N.V Balachandar, President – HR, Communication and CSR, Ashok Leyland) கூறுகையில், ‘’கல்வி  மிக மிக முக்கியமான முயற்சியாக இருக்கிறது. அந்த வகையில் ரோட் டு ஸ்கூல்’ முயற்சிக்கும், எங்களுக்கும் இந்தப்பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், நல்ல பலனளிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் குறிப்பிடுமளவுக்கு நல்ல மாற்றத்தை எங்களால் உணர முடிந்திருக்கிறது.

தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் எங்களது இந்த குடும்பத்தில் ஒன்றாக இணைவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆரோக்கியம், சுகாதாரம், விளையாட்டு உள்பட உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மேம்படுத்தும் பயிற்சிகளினால், அவர்களது கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற அம்சங்களிலும் மேம்பட இத்திட்டம் மூலம் உதவிப்புரிவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. இதனால் இத்திட்டம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். மேலும் சமூகத்திற்கு பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் இத்தகைய  ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை எங்களது கடமையாகவும், பொறுப்பாகவும் எடுத்து கொண்டிருக்கிறோம்.’’ என்றார்.

’ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது, ஆரம்பமானதிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு வெற்றியைப் பெற்று சாதித்து இருக்கிறது. அந்தவகையில் முக்கியமானவை :

* இரண்டாம் வகுப்பு முதல் ஏழாவது வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களிடையே கற்கும் அளவு 20% முன்னேற்றமடைந்து இருக்கிறது. இது பேஸ் லைன் மற்றும் எண்ட் லைன் டெஸ்ட் மூலம் கணக்கிடப்பட்டிருக்கிறது.

* குறிப்பிடுமளவுக்கு மாணவர்களின் வாசிப்பு திறன் (35%-க்கும் அதிகம்) முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஸ்டாண்டர்ட் ரீடிங் டெஸ்ட் மூலம் இது கணக்கிடப்பட்டிருக்கிறது.

* குறிப்பிடுமளவுக்கு மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் 70% பள்ளிகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

* மாணவர்களின் கல்வியில் சமூகம், எஸ்எம்சி மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு அதிகரித்து இருக்கிறது.

மேற்கூறிய வெற்றியைச் சாதிக்க, விஞ்ஞானப் பூர்வமான, செயல்முறைகள் சார்ந்த  அணுகுமுறையைப் பயன்படுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது. இத்திட்ட்த்தின் சில முக்கியமான சிறப்பம்சங்கள் :

* ஆசிரியர்கள் அனைவரும் முழு தகுதிப் பெற்றவர்கள்   ((பிஎட் படித்தவர்கள், கற்பிக்கும் அனுபவமுள்ளவர்கள்)), முழுநேரம் பணியில் இருக்கும்படியாக, மூன்று வருட காலம் பணிப்புரிய நியமனம் செய்யப்பட்டனர்.

* உடல்நலம் பேணும் பணியாளர்கள் தகுதிப்பெற்றவர்கள். நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.

* இத்திட்டம் தங்குதடையில்லாமல் செயல்படுத்துவதற்காக க்ளஸ்டர் & ப்ராஜெக்ட் மேனேஜர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

* எல்இஎபி எனப்படும் (Learning Enhancement and Practice – LEAP) லேர்னிங் என்ஹான்ஸ்மேண்ட் அண்ட் ப்ராக்டீஸ் பாடத்திட்டம் மற்றும் வொர்க் ஷீட்கள், மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் வகுப்பிற்கு ஏற்றபடியும், வயதுக்கு ஏற்ற கற்றல் இடைவெளியையும் பொறுத்து இவை வடிவமைக்கப்பட்டன. இந்த எல்இஎபி பாடத்திட்டம் தற்போது தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருக்கும் சமீபத்திய பாடத்திட்டத்தை கொண்டவை.

* விரைவானத் சோதனைகள், திறன் ஆய்வுகள், பேஸ் லைன், மிட் லைன், மற்றும் எண்ட் லைன் டெஸ்ட்கள் கொண்ட விரிவான மதிப்பீடு செயல்முறைகள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

* பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் திட்ட ஊழியர்களுக்கென பல பயிற்சி திட்டங்கள்.

* கணிதப்பாடத்திற்கான உபகரணங்கள், விஞ்ஞான உபகரணங்கள், லேப்டாப்கள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்கென இணைய வசதி.

* நடமாடும் நூலக வசதி, கூடுதல் பாடத்திட்ட செயல்முறைப் படிப்புகளைப் பயில்வதற்கென மாணவர்களுக்கு களிப்பூட்டும் பேருந்து.

* உடல்நலம், சுகாதாரம், உடல் மற்றும் மன வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் முழுமையான ஆரோக்கிய திட்டம்.

* நன்கு பிரபலமான மருத்துவமனைகளுடன் இணைந்து அனைத்து   மாணவர்களுக்கும் விரிவான உடல்நல பரிசோதனைகள்.

* பள்ளிகளில் அசோக் லேலண்ட் தன்னார்வலர்களின் ஆதரவுடன் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள், தேசிய மற்றும் சர்வதேச நாள் கொண்டாட்டங்கள்.

* விளையாட்டு உபகரணங்கள்,  விளக்குகள் (ட்யூப் லைட்கள்) மற்றும் மின் விசிறிகளுக்கான வசதி அமைத்தல். பள்ளி மேம்பாட்டிற்கான ரசிகர்களுக்கும் வாய்ப்பு அளித்தல்.

     2015-ம் ஆண்டில், 36 பள்ளிகளுடன் ‘ஓசூர்’ , ‘சூளகிரி’ மற்றும் ‘அஞ்செட்டி’ பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது 2016-ம் ஆண்டில் 72 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. இதில் அஞ்செட்டி பகுதியின் 36 பள்ளிகளும், சென்னையில் அசோக் லேலேண்ட் மதர் ப்ளாண்ட் அண்ட் டெக்னிக்கல் ரிசர்ச் சென்டர்-க்கு அருகாமையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூர் மற்றும் புழல் தொகுப்பில் 36 பள்ளிகளும் அடங்கும்.

     இன்று மேற்கொள்ளவிருக்கும் விரிவாக்கத்திற்கு முன்பாக, ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது, வருடத்திற்கு 15,000 மாணவர்களிடம் கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்பாடு போன்றவற்றில் நல்ல தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

More schools in Namakkal District


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles