Mr. Gopal Pillai Director & GM – Seller Services, Amazon India with Amazon Tatkal Van in Chennai.
அமேசான் தட்கால் சேவை மதுரையில் அறிமுகம்
சென்னையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனஙகள் தங்களது பொருட்களை அமேசான் டாட் இன் வலைதளத்தில் 60 நிமிடத்தில் விற்பனை செய்ய வசதி
சென்னை, மார்ச் 29 - சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (எஸ்எம்பி) அமோசான் டாட் இன் நிறுவனம் அமோசான் தட்கால் திட்டத்தை துவக்கியுள்ளது. ஒரே இடத்தில் விற்பனைக்கான அனைத்து வசதிகளும் கொண்ட அமேசான் தட்கால் பகுதியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களை 60 நிமிடத்திற்குள் ஆன்லைன் மூலமாக அமேசான்டான் இன் வலைதளத்தில் விற்கலாம்.
பதிவு செய்தல், படம் எடுத்தல், பொருட்கள் குறித்த தகவல் கையேடு, உள்ளிட்ட வற்றை கொண்டதாக அமேசான் தட்கல் சேவை இருக்கும். இதற்காக பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட நடமாடும் வாகனத்தில் விற்பனையாளர்களுக்கு அடிப்படை பயிற்சியும் அளிக்கப்படும். ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள்தங்கள் உற்பத்தி செய்தபொருட்களை அமேசான் டாட் இன் வலை தளத்தின் மூலமாக விற்பனை செய்ய அனுமதிக்கிறது. இது அவர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் ஆன்லைன் வாயிலாக வணிகம் தொடங்கவும் பயன்படும்.
அமேசான் தட்கல் வாகனம் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து சென்னையில் நிற்கும். இந்த சிறப்பு வாகனம் வடபழனி, போரூர், அண்ணாநகர், அம்பத்தூர், ரிச்சித் தெரு, திருவல்லிக்கேணி ஆகிய முக்கியமான சந்தைப்பகுதிகளை வலம் வரவுள்ளது. இன்று மார்ச் 29 இந்த வாகனம் சௌகார் பேட்டை, தண்டையார் பேட்டையிலும் நாளை அதாவது மார்ச் 30 அன்று கோடம்பாக்கம், தி.நகர் ஆகிய இடங்களிலும் வலம் வரும்.
சென்னைக்கு பின்னர் இந்த வாகனம் நாடு முழுவதும் சுற்றிவந்து ஆயிரக்கணக்கான சிறு தொழில்முனைவோர், கைவினைக் கலைஞர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு ஆன்லைன் வாயிலாக எப்படி வணிகம் செய்வது என்பதை கற்றுத்தரும்.
இது குறித்து அமேசான் இந்தியா விற்பனை சேவை பிரிவு இயக்குநரும் பொது மேலாளருமான திரு கோபால் பிள்ளை கூறுகையில், நாங்கள் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை சந்தித்துப்பேசும்போது அவர்கள் தங்களது வணிகத்தை ஆன்லைன் வாயிலாக செய்ய விரும்புவது தெரியவந்தது.
ஆனால் இந்த வணிகம் நேரம் அதிகமாகும் சிக்கலானது என்று அவர்கள் கருதினார்கள். இதனால் அவர்கள் இந்த தயகத்தில் இருந்து வெளிவருவது என்பது சிரமமான விஷயமாக இருந்தது. இந்த சவால்களை அவர்கள் எப்படி எதிர்கொள்ளமுடியும் என்று அமேசான் அவர்களுக்கு பயிற்சி அளித்தது. அவர்களுக்கு என்ற சில வழிமுறைகளை அமேசான் உருவாக்கியது. இந்த முன்முயற்சிகள் நிச்சயம் பல்வேறு தடைகளில் இருந்து விற்பனையாளர்கள் விடுபட உதவும் அமேசான் டாட் இன் வலைதளத்தில் வேகமாகவும் எளிமையாகவும் தங்களது உற்பத்தி பொருட்களை விற்கமுடியும்என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளமுடிந்தது.
இதுபோன்ற முன்முயற்சிகளால் ஆண்டுக்காண்டு அமேசான் டாட் இன் வலைதளத்தில் சேர்ந்து விற்பனையில் ஈடுபடும் வணிகர்களின் எண்ணிக்கை 250 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சேவையை அமேசான் துவக்கியது. இதனால் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் தங்களது பொருட்களை உடனுக்குட ன் விற்பனை செய்வதோடு அவர்களின் வணிகமும் நல்ல லாபகரமாக மாறியுள்ளது.