பாஷ் ஹோம் அப்ளையன்சஸ் தங்களது அதி நவீன வாஷிங் எந்திரங்களில் அறிமுகப்படுத்தும் ‘ஸ்பீட் ரேஞ்ச் கேம்பைன்’
* பாஷ் நிறுவனத்தின் புதிய ஸ்பீட் ரேஞ்சில் உள்ள ‘வாஷ் ஃபார்வர்ட்’ எந்தச் சேதாரமும் இல்லாமல் 60 நிமிடங்களுக்குள் துணிகளைப் புத்தம் புதிதாகத் சலவை செய்கிறது
உயர்தரம் மற்றும் ஜெர்மன் பொறியியலுக்குப் புகழ் பெற்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் பிராண்டான பாஷ் ஹவுஸ்ஹோல்ட் அப்ளையன்சஸ்நிறுவனம் தங்களது புது ரக வாஷிங் எந்திரங்களுக்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை இன்று தொடங்கியது.
பாஷ் ஸ்பீட் ரேஞ்ச் வாஷிங் எந்திரங்கள் 6 முதல் 9 கிலோ எடையுள்ள துணிகளை, 60 நிமிடங்களுக்குள் மிக வேகமாகச் சலவை செய்யும் வகையில் மிக உயரிய தரத்திலும், நீவீன தொழில்நுட்பத்திலும், வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாஷ் குழுவின் விரிவான ஆய்வுகளின் பயனாக, பெரும்பாலான இந்திய நுகர்வோர், துணிகளுக்கான சலவை நேரத்தைக் கணிசமாகக் குறைத்துப், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரங்களில் கவனத்தைச் செலுத்த விரும்புவதைத் தெரிந்து கொண்டனர்.
இதனைக் கருத்தில் கொண்டே பாஷ் நிறுவனம் வித்யாசமான வேவ் ட்ராப்லெட் வேரியோடிரம் தொழில்நுட்பம் கொண்ட, வாஷ் புரோக்கிராம் மற்றும் வாஷ் ஆப்ஷன் கொண்ட புத்தம் புதிய ஸ்பீட் ரேஞ்சை வாஷிங் எந்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் வித்யாசமான தேவைகளைக் கருத்தில் கொண்டே பாஷ் இதனைப் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிஎஸ்ஹெச் ஹவுஸ்ஹோல்ட் அப்ளையன்சஸ் தயாரிப்பு நிறுவன மேலாண் இயக்குனர் & சிஇஓ குஞ்சன் ஸ்ரீவாத்சவா கூறுகையில் ‘வாடிக்கையாளர் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பத்தில் புதுமைகளை அறிமுகப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். எங்களது சமீபத்தில் ஸ்பீட் ப்ளஸ் மற்றும் ஸ்பீட் புரொஃபெஷனல் வாஷிங் எந்திரங்கள் சலவைத் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், சலவை நேரத்தை 65% குறைக்கிறது’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் ‘விற்பனைக்குப் பிந்திய பழுது பார்க்கும் சேவைகளிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பாஷ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் வாஷிங் எந்திரத்தின் நிறுமப் பணிகளை மேற்கொள்வார்கள். அனைவருக்கும் ஏற்ற நீடித்த வாரண்டியை வழங்குவதுடன், துணைக் கருவிகளுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளோம். பயன்படுத்தும் போது எந்திரத்தின் ஏதேனும் ஒரு பாகம் விபத்து காரணமாகச் சேதமடைந்தாலோ, சரியாக இயங்காவிட்டாலோ, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தாராளமாகக் கிடைக்கும் துணைக் கருவிகளைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்’ என்றார்
உயரிய ஜெர்மன் தொழில்நுட்பம் காரணமாக பாஷ் நிறுவனம் ஐரோப்பாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களுக்கான பிராண்டாக விளங்குகிறது. பாஷ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனம் மிகச் சிறந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் சிக்கனத் தொழில்நுட்பங்களுடன், உலகின் உயர் தரமான வீட்டு உபயோகப் பொருட்களை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.
மேற்கண்ட வாஷிங் எந்திரங்கள் ‘டபிள்யூஎஃப்கே சுத்தப்படுத்துதல் & தொழில்நுப்ட ஆய்வு மையத்தின்’ தரச் சான்றைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் & ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றி பெற்ற ‘நோ டேமேஜ்’ பிரச்சரத்தைத் தொடர்ந்து ‘ஸ்பீட் ரேஞ்ச்’ தொலைக்காட்சி விளம்பரம் 2017 ஜூன் முதல் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது. தேவையான விளைவு & பிரச்சாரம் சென்றடையப், பொழுதுபோக்கு சேனல்கள், செய்திச் சேனல்கள் & திரைப்படச் சேனல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.
இந்தத் தொலைக்காட்சி விளம்பரத்தைக் கண்டு மகிழ
https://www.youtube.com/watch?v=Fe2wTp9Y3SM&list=PLJdi_ZZAgaUtF3khRftOTYbowovtYY3B4.