சென்னை, 2017 ஜுலை 8 – இந்திய உள்விழி உட்பொருத்தல் மற்றும் “ஒளிக்கதிர் விலக்க (ரிப்ராக்டிவ்) அறுவைசிகிச்சை மாநாடு 2017” என்ற தலைப்பில், கண் அறுவை மீதான இந்நாட்டின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கானது தமிழ்நாடு மாநிலத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல துறையின் மாண்புமிகு அமைச்சர் டாக்டர். சி. விஜய பாஸ்கர் அவர்களால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முதுநிலை பாதுகாப்பு ஆலோசகரான திரு. K விஜய குமார், ஐபிஎஸ் (ஓய்வு) அவர்கள் இந்நிகழ்வின் கவுரவ விருந்தினராக கலந்துகொண்டார்.
தங்களது திறன்களை இத்துறையினர் அறிய வெளிப்படுத்தவும் மற்றும் கண் மருத்துவ துறையின், குறிப்பாக கண் புரைநோய் மற்றும் ஒளிக்கதிர்விலக்க அறுவைசிகிச்சை பிரிவில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்து விளக்கவும், இன்ட்ராகுலர் இம்பிளான்ட் அண்டு ரெஃப்ராக்டிவ் சொசைட்டி ஆஃப் இந்தியா (IIRSI) அமைப்பால் நடத்தப்படுகிற இந்த இரு நாள் கருத்தரங்கில் உலகெங்கிலுமிருந்து 2000க்கும் கூடுதலான கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
கண் மருத்துவ துறையில் அனுபவமிக்க நிபுணர்கள் நிறைந்திருந்த இம்மாநாட்டு பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ்நாடு மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், “IIRSI மாநாட்டில் அங்கம் வகிப்பது குறித்தும் மற்றும் கண் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிந்து தங்களை நிகழ்நிலைப்படுத்திக்கொள்ள உலகெங்கிலுமிருந்து வந்து இங்கு குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்களைக் காண்பது குறித்தும் நான் பெருமிழ்ச்சியடைகிறேன். மறைந்த எங்களது மாண்புமிகு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில், முதலமைச்சர் சுகாதாரத்திட்டம் உட்பட பல சிறப்பான திட்டங்களை மருத்துவ துறையில் அறிமுகம் செய்திருந்தார்,” என்று குறிப்பிட்டார்.
டாக்டர். சி விஜய பாஸ்கர் மேலும் பேசுகையில், “கண் புரை (கேட்ராக்ட்) மற்றும் ஒளிக்கதிர்விலக்க (ரிஃப்ராக்டிவ்) அறுவைசிகிச்சை என்பது, ‘விஷன் 2020 இந்தியா’ என்ற செயல்திட்டத்தின் அடிப்படையில் மிக முக்கியமானதாகும். 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பார்வைத்திறன் இல்லாத மக்களின் எண்ணிக்கையானது 18 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சமீபத்திய புள்ளிவிவர ஆய்வுகள் காட்டுகின்றன. பார்வைத்திறன் நிலையில் சுமார் 80%ஆனது, கண் புரை மற்றும் கருவிழி சீர்குலைவுகளினால் ஏற்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் பார்வைத்திறன் பாதிப்பை தடுக்க முடியும். வராமல் முன்தடுக்கக்கூடிய பார்வைத்திறனின்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு, அரசு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மருத்துவமனைகளால் தொடங்கி செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு செயல்திட்டங்கள் பாராட்டுக்குரியவை. எனினும், விஷன் 2020 இந்தியா என்பதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கை எட்டுவதற்கு இன்னும் அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்படுகின்றன,” என்று கூறினார்.
IIRSI-ன் பொது செயலாளரான புரொபசர் அமர் அகர்வால் பேசுகையில், “கண் சிகிச்சை துறையில் சாதனைபடைத்த திறமையானவர்களை அனைவரும் அறியுமாறு வெளிப்படுத்துவது மற்றும் அவர்களை கவுரவிப்பது மற்றும் சக மருத்துவர்கள் மத்தியில் திறன்மிக்கவர்களின் ஒரு குழுவை உருவாக்குவதன் வழியாக கண் சிகிச்சை துறையில் பெரிய அளவிலான முன்னேற்ற நடவடிக்கைகளை IIRSI எடுத்து வருகிறது. அறிவை பகிர்ந்துகொள்ள ஒரு உகந்த தளத்தை இது வழங்குவதோடு, திறன் இடைவெளிகளை நிரப்பவும் உதவுகிறது. இம்மாநாட்டில் பகிர்ந்துகொள்ளப்படுகிற தகவலின் அளவானது மிகப்பெரியதாகும். மருத்துவ பணியாளர்கள் மத்தியில் கண் மருத்துவ துறையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகளை பலரும் அறியுமாறு செய்வதும், அதனை ஊக்குப்படுத்துவதும் இதன் இலக்காக இருக்கிறது. அத்துடன், உலகில் கண் சிகிச்சைக்கு அனைவரும் விரும்பித் தேடிவரும் அமைவிடமாக நம் நாட்டை ஆக்குவதும் இதன் குறிக்கோளாக இருக்கிறது,” என்று கூறினார்.
லென்ஸ் கேப்சூல் இல்லாத ஒரு கண்ணில் IOL-ஐ உள்வைப்பது தொடர்பான ஒரு புதுமையான அறுவைசிகிச்சை உத்தியை நேரடி செய்முறை நடவடிக்கையில் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக்குகின்ற ‘ஹேன்ட்ஸ் ஆன் வெட் லேப்’ என்ற அமர்வு இம்மாநாட்டு நிகழ்வில் நடைபெறவிருக்கிற பிற முக்கிய செயல்பாடுகளாக இருக்கும்.
பல சிறப்பு பிரிவுகள் தொடர்பாக அறுவைசிகிச்சைகள் மீதான பல வீடியோக்கள் வழியாக பார்வையாளர்களுக்கு கண் மருத்துவ சிகிச்சை மீதான கல்வியின் சாரத்தை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஒரு திரைப்பட விழாவும் இம்மாநாட்டில் இடம்பெறுகிறது.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Kann-08-07-17]