இந்தியாவில் சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கான அதிகாரம் பெறுவதை கூகுள் உறுதி செய்கிறது
உள்ளூரைச் சேர்ந்த சிறு-நடுத்தர தொழில் முனைவோர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றோரின் பெயர்கள் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்பட்டன.
சென்னை, ஜூன் 27, 2017: இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற கூகுள் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக அவர்கள் இணையம் மற்றும் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகக் கையாள வேண்டும் என்பதற்கான பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்துகிறது.
சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியின் போது சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களிடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்க்பட்டன. அவர்களது தங்களது வளர்ச்சிக்காக இணையம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தேசிய அளவிலான போட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
சிறு மற்றும் நடுத்தர ஹீரோக்களுக்கான விருது நிகழ்வில் 142-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்து விருதுகளைப் பெற்றனர். அந்த நகரங்களைச் சேர்ந்த அனைவரும் இந்தப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குறிப்பாக, ஹோசியார்புர், ராஜ்கோட், ராஜமுந்திரி, ஜாம்செட்பூர், கோவை, பீமாவரம் என பல்வேறு நகரங்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
தென் பிராந்திய அளவில் மூன்று பிரிவுகளில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. டிஜிட்டல் மூலமாக வணிகத்தில் தாக்கம் என்ற பிரிவுக்காக வனித்காளியின் டைவ் இந்தியாவும், டிஜிட்டல் மூலமாக தாக்கங்களை மாற்றலாம் என்ற பிரிவுக்காக புனீத் மஞ்சுவின் யுவர் தோஸ்ட், பெண் வணிகத் தலைவர் பிரிவுக்காக அர்பிதா கணேஷின் பட்டர் கப்ஸ் ஆகியன விருதுகளைப் பெற்றன. இந்திய வர்த்தக சம்மேளத்தின் தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவரும், வாலிங்ரோ பிரைவேட் லிமிடெட்டின் தலைவருமான திரு ஏஆர் ஆர்எம் அருண், கூகுள் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநர் ஷாலினி கிரிஷ் ஆகியோர் வெற்றி பெற்றோரை கெளரவித்தனர். இதன் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் தில்லியில் நடைபெறவுள்ளது.
டிஜிட்டலுக்கான முக்கியத்துவம் குறித்து, கூகுள் நிறுவனத்தின் வணிகப் பிரிவு தீர்வுகளுக்கான இயக்குநர் ஷாலினி கிரிஷ் பேசியது:
இந்தியாவில் இப்போது 400 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தகவல்களைப் பெறுதல், ஒருவருடன் மற்றொருவரை இணைத்துக் கொள்ளுதல், வணிகத்துக்கான விஷயங்களைப் பெறுதல் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இணையதளம் என்பது மிகப்பெரிய ஜனநாயகத்துவ சக்தியாக திகழ்கிறது.
இது இருப்பிடங்கள் மற்றும் மொழிகள் என அனைத்துத் தடைகளையும் உடைத்து எறிந்துள்ளது. இப்போது விருது பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த ஹீரோக்களே இதற்கு மிகப்பெரிய சாட்சியாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டு அதன்மூலமாக அவர்களுக்கு ஏற்படும் சவால்களைத் தீர்த்து தொழில், வர்த்தகத்தை வளர்ச்சி அடையச் செய்துள்ளனர் என்றார்.
இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையே தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களை கட்டமைக்க வேண்டிய தேவைகள் குறித்த ஆராய்ச்சிகளை கேபிஎம்ஜியுடன் இணைந்து கூகுள் நடத்தியது. அதில் கண்டறிந்த அம்சங்கள், இணையத்தின் தாக்கம் மற்றும் இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல்மயம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் 68 சதவீதமானவை இணையதளம் இல்லாமல், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு இல்லாமல் இருக்கின்றன.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வணிகம் செய்யும் நிறுவனங்கள் 52 சதவீத அளவுக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். அவர்களது சொந்த ஊர்களைத் தாண்டியும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வியாபாரம் செய்கின்றனர். ஆனால், இது டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத தொழில் நிறுவனங்களில் வெறும் 29 சதவீதம் மட்டுமே இருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களில் டிஜிட்டல் தொடர்பான கருத்துகளை அதிகரிப்பதன் மூலம் அந்தத் தொழில்கள் உயர வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொழில்கள் உயர்வதால், அது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத புள்ளிகளை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடுகின்றன. இதனால், வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 46 முதல் 48 சதவீதம் அளவுக்கு ஜிடிபி புள்ளிகள் உயர்ந்திடும்.
டிஜிட்டல் திறன் பயற்சி---வெப், மொபைல்:
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு அதற்கான தனித்துவமான திட்டத்தை கூகுள் இந்தியா வடிவமைத்துள்ளது. ஆன்-லைன் முறையிலும், ஆன்-லைன் முறையில் இல்லாமலும், நடமாடும் வகையிலான பயிற்சி வகுப்புகளையும் கூகுள் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியாவைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தோர் அத்தியாவசியமான டிஜிட்டல் திறன்களைப் பெற முடியும். அதன்படி, சென்னையில் கூகுள் இந்தியாவனது தனது பயிற்சி பட்டறையை இன்று தொடங்கியுள்ளது. இதில் 60 உள்ளூர் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தோருக்கு வெப் மூலமாக ஆய்வுகளை மேற்கொள்வது, டிஜிட்டல் பிரசார கட்டமைப்பு போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்துகள் பரிமாறப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த டிஜிட்டல் கருத்தரங்க திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இணையதளம் இல்லாமல் கருத்தரங்குகள் மூலமாக டிஜிட்டல் பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இந்திய தொழில் வர்த்தக சம்மேளத்துடன் இணைந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் 40-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளன. ஆன்-லைன் மூலமாக நடத்தப்படும் பயிற்சி பட்டறையில் 90-க்கும் மேற்பட்ட விடியோ பதிவுகளைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். இதனை இலவசமாக g.co/digitalunlockedஎன்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.
இணையம் தொடர்பான அம்சங்கள் என்ன என்பது குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை எப்படி மொபைல் மற்றும் விடியோ மூலம் கொண்டு சேர்ப்பது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அனைத்தும் கூகுள், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் ஆகியன அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று சான்று பெற்றுள்ளன.
இந்த அம்சங்களைத் தாண்டி இப்போது கூகுள் நிறுவனமானது, பிரைமர் என்கிற இலவச செல்போன் அப்ளிகேஷனை தொடங்கியுள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் வணிகம் குறித்த திறன்களை விரைவாகவும், வேகமாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை, Google Play and iOS app storeஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பிரைமரில் உள்ள அம்சங்களை இணையதளம் இல்லாமலும் தெரிந்து கொள்ள விரைவில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும். கடந்த சில மாதங்களில் மட்டும் 1.5 மில்லியன் முறை பிரைமர் ஆனது பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
வணிக ரீதியான இணையதளத்தை 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் உருவாக்கலாம்….
இணையதளத்துடன் கூகுள் எனது வணிகம் என்ற புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அண்மையில் தொடங்கியுள்ளது. அதாவது, வணிகத்துக்குத் தேவையான இணையதளத்தை மிகவும் விரைவாக, இலவசமாக எந்தப் பிரச்னையும் இன்றி தொடங்கலாம். கூகுள் மை பிசினஸ் யூசர்ஸ் பகுதியில் இந்த அம்சம் கிடைக்கப்பெறும்.
கூகுள் சர்ச் மற்றும் மேப்புகளில் ஏற்கெனவே உங்களது விவரங்கள், புகைப்படங்கள் இருந்தால் மிகவும் எளிதாக இணையதளத்தை தொடங்கி விடலாம். கூகுள் எனது வணிகமானது ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ், உருது, குஜராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. 1,20,000-க்கும் மேற்பட்டோர் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தில் இணைந்து பங்கேற்றுள்ளனர்.