(திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு)
”அக்னி பறவை” மெகா தொடர் ஆரம்பித்த சில வாரங்களிலே நம்பர் ஒன் இடத்தை பிடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது. வழக்கமான மெகா தொடர்களிலிருந்து சற்று மாறுபாட்ட திரைக்கதையுடன், இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றி புதிய கால்தடத்தை பதித்து இயக்குபவர் கவிதா பாரதி .இந்த தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கும் இத்தொடரின் மறு ஒளிப்பரப்பு காலை 11.00 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.
கல்லூரி புரொபசராக பணிப்புரிபவர் மாதவி. இவர், சக மாணவர்கள் இடையே அதிக அன்பை பெற்று வருகிறாள். மாணவி பூஜாவின் அம்மா சுசிலாவுக்கும், மாதவிக்கும் இடையே சற்று விரோதம் ஏற்பட்டிருக்க, மாதவி நடத்தைக் கெட்டவள் அவள் கணவனை இழந்தும் ஒரு குழந்தையை சுமர்க்கிறாள், இவளிடம் பயிலும் மாணவர்களுக்கும் இவள் போல் ஒழுக்கமற்றவர்களாக மாற வாய்ப்புள்ளது என பழிச் சுமத்தி கல்லூரியைவிட்டு வெளியேற்ற நினைக்கிறாள் சுசிலா.
மாதவியை வெறுக்கும் அதே கல்லூரியில் வேலை செய்யும் ஜான்ஸியும் சுசிலாவும் ஒன்று இணைந்து மாதவியை கல்லூரியை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். மாணவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து போறாடி மாதவியை மீண்டும் கல்லூரிக்குள் வரவழைக்கிறார்கள். மாதவியின் நண்பன் ரவி திருமணத்தை வேண்டாம் என்க, அவன் பெற்றோரின் கோபம் மாதவி மீது பாய்கிறது, இதை உணர்ந்த ரவி, பெற்றோர் பார்த்த பெண்ணை மனமின்றி மணம் புரிகிறான். கல்லூரிக்குள் வரும் மாதவிக்கு ஜான்ஸியால் ஏற்படும் இழப்பு என்ன?? மாதவியை சுசிலா அடுத்து என்ன செய்ய போகிறாள் ?? ரவி தன் மனைவியை வெறுக்க காரணம் மாதவிதான் என அறிந்ததும் அவள், செய்ய இருக்கும் அடுத்த செயல் என்ன?? என்ற அனல் பறக்கும் கேள்விக்கு இடையில் அப்பாவி மாதவியாக நடித்து வருகிறார் இடுப்பழகி சிம்ரன்.