புதுடெல்லி: 1967ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட் சட்டம் வடிவமைக்கப்பட்டதன் 50 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், 8 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, பாஸ்போர்ட் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும். இனி வழங்கப்படும் பாஸ்போர்ட்கள் இந்தியில் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.