புதுடெல்லி: சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இரண்டு வாரத்துக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.