நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன.
அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், தமிழ்நாட்டில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய்.
இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை வேலூர் மாவட்டம், தரபடவேடு என்ற இடத்தில் வேலூர் - காட்பாடி சாலையில் கதவு எண் 5-ல் ஏபிஎல் டவர்ஸ் என்ற இருமாடி கட்டிடத்தில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல்.
இக்கிளையை பிரபல நடிகையும், 150-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளவருமான ஜனனி அய்யர் திறந்து வைத்தார்.
டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது.
கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான ஜனனி அய்யரின் பங்கேற்பு.
நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறது வேலூர் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன வி2எச் குழுமம். 2800 சதுர அடி பரப்பளவில் 2 மாடி கட்டிடமாய் பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை, நவீன வகை டாட்டூ போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
புத்தம் புதிய சிகையலங்காரங்கள், சிகை உதிர்வை தடுக்க அழகு கலைஞர்களின் அறிவுறுத்தல்கள் போன்றவையோடு திறப்பு விழா சலுகையாக 15 முதல் 20 சதவிதம் வரை அழகு சேவைகளில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.