சென்னை: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் மாதத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்து இந்த போராட்டம் நடைபெற்றது. அதன் பின் இவர்களை தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து சமாதனம் செய்தனர், அதன் பின்னர் விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று 2-வது கட்டமாக விவசாயிகள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர். சென்னையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விவசாயிகள் ஜட்டி, கோவணம் அணிந்து அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற தவறியதால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்'. அடுத்த மாதம் 10-ந்தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.