புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரரும், ஆள் ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ரிவா சோனங்கி என்பவரை திருமணம் செய்து கொண்டார், தற்போது இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
ரவீந்திர ஜடேஜா, தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.