புதுடெல்லி:இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்து, உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன.
கேரளா, புதுச்சேரி, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் அரசின் இந்த சட்டத்தை அமல் படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், ஹைதராபாத்தை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் அமைப்பு ஒன்று, மாட்டிறைச்சி தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.