புதுடெல்லி:ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல் ஆகவுள்ளது, இந்த வரி விதிப்பில் 5, 12, 14, 28 சதவீதம் என நான்கு வித வரிகள் உள்ளன.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கான கவுன்சில் கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்த பின் கூறியதாவது:
"ஜி.எஸ்.டி வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தில் பெரிய திருப்பு முனையாக அமையும் என்றும், ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என்பது சாமானிய மனிதனுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும்" அவர் கூறினார்.
Image may be NSFW.
Clik here to view.