சென்னை:இரு நாட்களுக்கு முன் சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிட்டிமால் வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.