புதுடெல்லி:சமீபகாலமாக ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது, இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மஞ்சுளா (28) என்ற மாணவி டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த மஞ்சுளா என்ற மாணவி பி.இ பட்டப் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். பின்னர் இவர் 2013ஆம் ஆண்டு ரித்தேஷ் விர்ஹா என்பவரை திருமணம் செய்துகொண்டு இந்தூரில் வசித்து வந்தார். இதனிடையே டெல்லியில் உள்ள ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த மஞ்சுளா, அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவருடைய அறையில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.