புது டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 60. அனில் மாதவ் தவே மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்தவர்.
அனில் மாதவ் தவேவின் மறைவுக்கு பிரதமர் மோடி தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் கூறும்போது: "அனில் மாதவ் தவேவின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர் அனில் மாதவ் என்று மோடி கூறியுள்ளார்.
Image may be NSFW.
Clik here to view.