சென்னை:தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 2 கட்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊதிய உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன், பணிக்கொடை போன்ற சலுகைகள், படிகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் நிருபர்களை சந்தித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், “போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி 15-ந்தேதி நடைபெறும். தொழிலாளர்களுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரி இருந்தோம். ஆனால் வெறும் ரூ.750 கோடி ஒதுக்கி உள்ளதாக கூறியதை ஏற்க முடியாது. அதனால் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை என்றார்.