சென்னை: அளவுக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவர் மீதும் குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதத்தை விதித்து பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்தது, இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து, சசிகலா உட்பட 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், 4 ஆண்டு சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.