கோலாலம்பூர்:மலேசியாவில் அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் முதல் கோலை அடித்தார். பின்னர் 13-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் குஷாமா முராடா ஒரு கோல் அடித்தார்.
பின்னர் இரண்டாம் பாதி தொடங்கிய 43-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹெய்டா யோஷிகரா ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து இந்திய வீரர் மன்தீப் சிங் ஒரு கோல் அடிக்க 2-2 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அடுத்த சில நொடிகளில் ஜப்பான் வீரர் ஜென்கி மிடானி பெனால்டி ஒரு கோல் அடிக்க ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் இந்திய வீரர் மந்தீப் சிங் 51 மற்றும் 58-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. இந்த த்ரில் வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை வரும் 5 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
இதுவரை, ஆடிய 4 லீக் போட்டிகள் மூலம், இந்தியா 7 புள்ளிகளை பெற்றுள்ளது.