Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

இந்த கேள்வியை கேட்டால் பளாரென்று அறை விடுங்கள்

$
0
0

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று மே தின கூட்டம் தேமுதிக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் விஜயகாந்த் மிகச்சில நிமிடங்கள் மட்டுமே பேசினார், அவரை தொடர்ந்து பேசிய பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேசும்போது "ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைப் பற்றியோ, கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றியோ கேட்க தைரியமில்லாதவர்கள், கேப்டனின் உடல்நிலையைப் பற்றி மட்டும் கேட்கிறார்கள். இப்போது தொண்டர்களிடத்தில் நான் ஒரு முக்கியக் கோரிக்கை வைக்கிறேன்.

இனி யாராவது உங்களிடத்தில் விஜயகாந்தின் உடல்நிலை எப்படி இருக்கிறது எனக் கேட்டால், அவர்களுடைய கன்னத்திலேயே பளாரென்று ஒரு அறை விடுங்கள். நம்முடைய கேப்டன் 100% சிறப்பாக, சூப்பராக, ஃபிட்டாக சிங்கம்போல வந்து இங்கு அமர்ந்துகொண்டிருக்கிறார்" என பிரேமலதா பேசினார்.

If anybody raise this question slap them Premalatha Vijayakanth


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles