புது டெல்லி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது சி.பி.ஐ. தரப்பில் 2 வழக்குகளும், மத்திய அமலாக்கத்துறை சார்பில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த 3 வழக்குகளும் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இதில் எழுத்துப்பூர்வமான அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த இந்த 3 வழக்குகளிலும் தீர்ப்பும் வரும் ஜூலை 15–ந் தேதி வழங்கப்படுகிறது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விரும்பினால் ஜூலை 5–ந் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இதன்மூலம், சுமார் 6 ஆண்டுகளாக சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.