சென்னை: "இரட்டை இலை" சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடியை லஞ்சமாக கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனாவை நேற்று முன்தினம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர், சென்னை, கொச்சி மற்றும் பெங்களூருக்கு தினகரன், மல்லிகார்ஜூனாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 7 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸ் மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இன்று டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனாவை டெல்லி போலீசார் ஏர் இந்தியா விமானத்தின் மூலம் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.