சென்னை: மறைந்த முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஜூலை 27, 2015ம் ஆண்டு, மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருக்கும் போது தீடிரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது உடல் 2015 ஜூலை 30ம் தேதி முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்டும் பணிகளை மாநில அரசு மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அப்துல்கலாம் அவர்கள் இறந்த ஜூலை 27ம் தேதியன்றே அவரது நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.