சென்னை:தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14 முதல் போராட்டம் நடித்தி வருகின்றனர். பயிர்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி வேளாண்மையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் நலனை காக்கவும், மத்திய மாநில அரசினை கண்டித்தும் திமுக சார்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் அக்கட்சியின் தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்னியூஸ்ட் கட்சியன் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் விவசாயிகளும், அனைத்துகட்சி தலைவர்களும் இந்தியப் பிரதமரை சந்திப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது, விவசாயிகளின் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நேற்று வலியுறுத்தப்பட்டது.