மாபெரும் மரம் நடு விழா "கிரீன்விஷ் ஃபவுண்ஷடேஷன்” மூலமாக ஜூன் 5 2017 (உலக சுற்றுச்சுழல்) தினத்தன்று 15 கோட்டங்களாகவும்,200 வார்டுகளாகவும் சுமார் 80 இலட்சம்
"பீமாமூங்கில் "மரங்களை சென்னை உள் மற்றும் வெளி புறங்களிளும் இந்த வருடம் 2017-க்குள் 4 கட்டங்களாக நடப்படும்.
"கிரீன்கலாம் " என்கின்ற செயலி (APP) மூலம் 2020வரை பாதுகாத்து வளர்க்கப்படும்.இந்த பணிகளை செய்ய 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 15 ஆண் மற்றும் 15 பெண் பசுமை தோழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் களப்பணி என்னவென்றால் அறிவு சார்ந்த பரிமாற்றமும்,தொலைநோக்கு பார்வைக்கான கலந்தாய்வும் மற்றும் வழிகாட்டுதலின் படியும் அந்த 2 குழுக்கள் செயல்படும். 30 பசுமை தோழர்களால் இந்த செயலி(APP) கண்காணிக்கப்படும். 15 கோட்ட ஆய்வாளர்கள் அவர்களுக்கு கீழ்,200 வார்டு பசுமை தோழர்களும், அவர்களின் கீழ் 1 வார்டுக்கு 20 பசுமை தோழர்களும் கண்காணிக்கப்படுவர்.
இந்த பசுமை தோழர்களை ஊக்குவிக்கும் வகையில் “சென்னைகிளீன்ப்ளாண்டத்தான்லீக்" எனும் விருதை முதல் 15 குழுக்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு இந்த "சிசிபிஎல்" விருது வழங்கப்படும்.இந்த விருதின் மூலம் மரம் வளர்ப்பு மற்றும் விழிப்புணர்வு செய்யப்படும். இத்தகைய செயலின் மூலம் சென்னை மாநகரத்தை மாசற்ற தலைநகரமாக 2020 மாற்ற முடியும்