வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் உள்ள கோரந்தாங்கியில் புதிதாக பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது, இந்த பள்ளி கட்டும் பணியில் கட்டிடத் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கட்டிடம் தீடிரென்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பாக்கியராஜ் (40) என்ற தொழிலாளி பலியாகியுள்ளார், மேலும் 13 பேர் இந்த சம்பவத்தினால் படுகாயம் அடைத்துள்ளனர்.
படுகாயம் அடைந்த 13-பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.