புது டெல்லி:தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், 29-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, டெல்லியில் உள்ள விவசாயிகளை சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்துக்கொண்டார், மேலும் தமிழக விவசாயிகள் இன்று மண் சோறு சாப்பிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது பிரேமலதா அவர்களும் விவசாயிகளுடன் மண்சோறு சாப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழர்களுக்கு தலைகுனிவு. அணைகள் தற்போது வறண்டு உள்ள நிலையில் அதனை தூர்வார வேண்டும். நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும்” என்று கூறினார்.