சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து, இன்று வருமான வரித்துறையினர் நடத்தும் விசாரனையில் ஆஜராகுமாறு, கீதா லட்சுமிக்கு சம்மன் அனுப்பட்டது. இதை எதிர்த்து கீதா லட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், என் வீட்டில் எந்த பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. மேலும் வருமான வரித்துறையினர் எனக்கு சட்டவிரோதமாக சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்கள் எனக்கு சம்மன் அனுப்ப அதிகாரம் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.