Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்

$
0
0

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் மகிஜா. இவரது மகன் ஜிஷ்ணுபினராய். அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்பறையில் ஜிஷ்ணுபினராய் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் 5 மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் தனது மகன் சாவுக்கு காரணமான மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்று மகிஜா வற்புறுத்தினார்.

இது தொடர்பாக தனது மகன் சாவுக்கு நீதி கேட்டு தாய் மகிஜா பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கேரள முதல்வர் மற்றும் பலருக்கு இது தொடர்பாக மனுக்களையும் அனுப்பினார். மகிஜாவின் போராட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள கேரள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மகிஜா, அவரது உறவினர்கள் திரண்டு சென்றனர். அவர்களுடன் பா.ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பினரும் சென்றனர். அவர்கள் அனைவரும் கும்பலாக டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.

மகிஜா உள்பட 6 பேர் மட்டும் உள்ளே சென்று டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் அதை மகிஜாவும் அவருடன் வந்தவர்களும் ஏற்க மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அத்துமீறி டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினார்கள். போலீசார் தடியடியில் மகிஜா மற்றும் அவரது உறவினர்கள் பா.ஜனதா கட்சியினர் காயம் அடைந்தனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால் மகிஜாவை போலீசார் குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்த தடியடியை கண்டித்து இன்று கேரளாவில் பா.ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவை தெரிவித்துள்ளது.

இதனால் இன்று கேரளாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் இயங்கவில்லை. சில தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Police high handness full shutdown in Kerala


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles