சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வேட்பு மனு தாக்கல் செய்தார், அப்போது அவருக்கு மாற்று வேட்பாளர் மனு தாக்கல் செய்யவில்லை. தனது கணவர் பேட்ரிக் மாதவன் பெயரையும், வங்கி கணக்கையும் அவர் தாக்கல் செய்யவில்லை. இந்த காரணத்தினால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில் தீபாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் அறிவித்தார்.
இதே போல் அ.தி.மு.க. அம்மா அணி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி மதுசூதனன், பா.ஜ.க. வின் கங்கை அமரன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணன் ஆகியோரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.