சென்னை:தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை மோசமானதில் டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில் ஜெயலலிதாவுக்கும், நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் தான். அவரது சொத்துக்கள் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் மகன் என்பதற்கான அசல் ஆதாரங்களை கோர்ட்டில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது. அந்த அசல் ஆவணங்கள் இன்று கிருஷ்ண மூர்த்தி கோர்ட்டில் சமர்பித்தார்.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண மூர்த்தியிடம் நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். நேரடியாகவே, உங்களை சிறைக்கு அனுப்ப முடியும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.