டமாஸ்கஸ்:சிரியாவின் பழைய டமாஸ்கஸ் நகரில் இன்று தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். பாப் அல்-சாகிர் பகுதியில் பயணிகள் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு பலர் உயரிழந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.