லக்னோ:உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநிலத்தின் நவுடன்வா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அமான் மணி திருப்பதி என்பவர் சுமார் 80,000 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரை 32,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியில் இருந்த இவர் தேர்தலில் போட்டியிட சீட்டு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருடைய விண்ணப்பம் மறுக்கப்பட்டது.
வெற்றி பெற்றுள்ள அமான் மணி தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.