சென்னை:அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது:
1999 ஆம் ஆண்டு நகர செயலாளராக இருந்த பன்னீர்செல்வத்தை தேனி மாவட்ட செயலாளராக நியமிக்க ஜெயலலிதாவிடம் நான் பரிந்துரைத்தது செய்தது தான் நான் செய்த முதல் தவறு என்று தினகரன் கூறினார்.
மேலும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை எப்படியாவது அழித்துவிடலாம் என நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றும் அவர் கூறினார்.