திருச்சி:திருச்சி துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பாலகுமார். இவருக்கும் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள கோயில் ஒன்றில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாளில் மணப்பெண் திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தினால் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், மணமகனின் வீட்டார் மணமகளின் வீட்டார் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். உடனே, மணப்பெண் வீட்டார் மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டுள்ளனர். இதற்கு, மணமகளின் தங்கையும், மாப்பிள்ளை வீட்டாரும் ஒத்துக்கொண்டதையடுத்து அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டார் காவல்துறையில் கொடுத்த புகாரும் வாபஸ் பெறப்பட்டது.