சென்னை:ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மறைந்த தமிழக முதலமைச்சர்களான அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெயலலிதாவிற்கு அவ்வாறு சிகிச்சை அளிக்க வற்புறுத்தியதை யாரும் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும், ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் உண்மைகளை பொதுமக்கள் அறிய, உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக வரும் 8-ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.