சென்னை:ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது இல்லத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது:
“ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நான் டெல்லி சென்ற பின்னர் தான், தம்பிதுரை அதிமுக எம்.பிகளை கூட்டிக் கொண்டு பிரதமரை சந்திக்க வருவதாகவே எனக்கு தெரியும். டெல்லி வந்த அவருக்கு பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே நான் சந்திக்கும் போது தம்பிதுரை உடன் வரலாமா? என பிரதமர் அலுவலகத்தில் கேட்டேன். ஆனால் அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.
அதிமுக எம்.பிகள் கையெழுத்திட்ட அந்த கோரிக்கை மனுவையாவது என்னிடம் கொடுங்கள். உங்கள் சார்பில் பிரதமரிடம் நான் கொடுக்கிறேன் என நான் தம்பிதுரையிடம் கூறினேன். ஆனால் அதற்கு தம்பிதுரை மறுப்பு தெரிவித்துவிட்டார். கடைசி வரை பிரதமரை அவர் சந்திக்கவே முடியவில்லை. எப்படி ஒரு பிரதமரை சந்திப்பது என்ற நடைமுறை கூட தெரியாத ஒரு எம்.பியாகத்தான் தம்பிதுரை இவ்வளவு நாள் தனது காலத்தை ஓட்டியுள்ளார்.” என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
Image may be NSFW.
Clik here to view.