சென்னை:சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் அமைச்சர் செங்கோட்டையன், பொருளாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகிய நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் இன்று துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.