Quantcast
Viewing all articles
Browse latest Browse all 6182

மீண்டும் அமெரிக்கா செல்ல விரும்பும் ஸ்ரீநிவாஸின் மனைவி

ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா(32) என்பவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தின் ஒலாத் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஸ்ரீநிவாஸ் உடன் இருந்த அவருடைய நண்பருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீநிவாஸின் உடல் ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவியான சுனாயனா டுமாலா மீண்டும் அமெரிக்கா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இன்டச் சொல்யூஷன்ஸ் எனும் நிறுவனத்தில் சுனாயனா பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனம் தற்போது சுனாயனா எப்போது வேண்டுமானாலும் திருப்பவும் பணியில் சேரலாம் என்று கூறியுள்ளது. இதனால் சுனாயனா மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுனாயனா: "தனது கணவர் (ஸ்ரீநிவாஸ்) இறந்து விட்டார் என்று காவல்துறையினர் சொன்னதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியிருக்கிறார். தான் எப்படி இருக்க வேண்டும், எங்கு பணிபுரிய வேண்டு்ம் என்று என் கணவர் (ஸ்ரீநிவாஸ்) கனவு கண்டாரோ அப்படி இருக்க போவதாக சுனாயனா டுமாலா தெரிவித்துள்ளார்.

Image may be NSFW.
Clik here to view.
Srinivas kuchibhotlas wife Sunayana Dumala to move towards US


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles