நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் பட்டியலை வலுப்படுத்தும் மைக்ரோமேக்ஸ்; புது ரகக் குளிர்சாதனப் பெட்டிகள் அறிமுகம்
* 4000+ விற்பனைத் தொடு நிலையங்கள் மற்றும் 400+ பழுது நீக்கும் மையங்கள் மூலம் விநியோகம் மற்றும் சேவை வலைப்பணியை வலுப்படுத்துதல்
* 01 விண்டோ & 07 ஸ்பிளிட் குளிர்சாதனப் பெட்டிகள்
* விரைவான பழுது நீக்கச் சேவைக்காக மைக்ரோமேக்ஸ் வீட்டு ஹோம் அசிஸ்ட் செயலி அறிமுகம்
* அடுத்த 3 ஆண்டுகளில் குளிர்சாதனப் பெட்டிச் சந்தைப் பங்கில் இரட்டை இலக்கங்களைக் கைப்பற்ற இலக்கு
சென்னை: 2017 மார்ச் 2: மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்க வேண்டும் என்னும் தொலைநோக்குத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவின் முன்னணி மைபேசி பிராண்டான மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேடிக்ஸ்நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகள் சந்தையில் தனது பங்களிப்பை வலுப்படுத்தப் புது ரக குளிர்சாதனப் பெட்டிகளை இன்று அறிமுகப்படுத்தியது.
கடந்த 2016 ஜூனில் குளிர்சாதனப் பெட்டிகளின் வெற்றிகரமான முன்னோட்டத்தைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு குளிர்சாதனப் பெட்டிகளின் அனைத்து ரகங்களும் சந்தைக்கு வந்திருக்கின்றன. கோடைக் காலம் விரைவில் இந்தியாவில் வரவிருக்கும் தருணத்தில் 07 ஸ்பிளிட் மற்றும் 01 விண்டோ குளிர்சாதனப் பெட்டிகள் அறிமுகம் பொருத்தமே.
கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களில் மேற்கூறிய பொருட்கள் தாராளமாகக் கிடைக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படும். 4000+ விற்பனைத் தொடு நிலையங்கள் மற்றும் 400+ பழுது நீக்கும் மையங்கள் மூலம் விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பின் பழுது பார்க்கும் சேவை வலைப்பணி வலுப்படுத்தப்படும். வழக்கமான சில்லரைத் தொடு நிலையங்களுடன், முன்னணி மின் வணிக வலைதளங்களிலும் வரும் மாதங்களில் இவை கிடைக்கும்.
இது குறித்து மைக்ரோமேக்ஸ் இன்ஃபர்மேடிக்ஸ் நகர்வோர் மின்னணுப் பிரிவு, துணைத் தலைவர் ரோஹன் அகர்வால் கூறுகையில் ‘இந்திய குளிர்சாதனப் பெட்டிச் சந்தை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தயாரிக்கும் பொருட்களின் அதி நவீன தொழில்நுட்பம், சிறப்பான விநியோக வலைப்பணி, உலகத் தரமான பழுது நீக்கும் சேவை அனுபவம் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளோம். மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் பிரபல பிராண்டான மைக்ரோமேக்ஸ் மேற்கண்ட பிரிவுகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய பொருளில் தடம் பதிக்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. எங்கள் குளிர்சாதனப் பெட்டிகளின் முக்கிய அம்சம் வாடிக்கையாளர் தேவைகளை (100% செம்பு, இரு வழி கழிவு, 4 வழி ஸ்விங்க், டர்போ கூலிங்) அறிந்து அதற்கேற்ப வடிவமைத்திருப்பதே ஆகும். இந்தப் பிரிவில் சிறப்பான வளர்ச்சியை எட்ட எங்கள் பிராண்ட் பிரபலம் உதவுமென உறுதியாக நம்புகிறோம்’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில் ‘அனைத்து வாடிக்கையாளருடன் தொடர்பை உறுதிப்படுத்த சேவை ஒன்றே முக்கியம் என்பதை மைக்ரோமேக்ஸில் நாங்கள் உணர்ந்து கொண்டோம். எங்கள் குளிர்சாதன மற்றும் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்யேகமாக உருவாக்கி உள்ள மைக்ரோமேக்ஸ் ஹோம் அசிஸ்ட் செயலி மூலம் கோரிக்கை அல்லது புகார்களைப் பதிவு செய்து எளிதில் தீர்வு காண இயலும். எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகளில் நாங்கள் பெற்ற அதே வெற்றியை மீண்டும் பெறுவதுடன் அடுத்த 3 ஆண்டுகளில் குளிர்சாதனப் பெட்டிகள் பிரிவில் இரட்டை இலக்கச் சந்தைப் பங்கை எட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.