சென்னை: சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வேண்டும் என்று கூறினார், மேலும் அவர் தன் கண்களை மூடிக்கொண்டு ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன்.
ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும்.
சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.