தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மணப்பாடு. இங்கு உள்ள கடல் பகுதிக்கு மீனவர்களின் படகில், பயணிகள் சுமார் 30 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் படகில் பயணித்த சுமார் ஒன்பது பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.