கான்பூர்:உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷியாம் பாபு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேவாரியா என்பவருக்கும் கடந்த 23-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஷியாம் பாபுவின் வீட்டில் தேவாரியா அன்றிரவு தங்கியுள்ளார்.
மறுநாள் காலை, அறைக்குள் இருந்த தேவாரியா காணாமல்போனார், அத்துடன் அங்குள்ள கைப்பெட்டியில் வைத்திருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் காணாமல்போனது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம் பாபுவும், அவரது உறவினர்களும் தேவாரியாவின் மொபைலைத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது, தேவாரியாவின் பெற்றோரிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்களுக்கும் அவள் எங்கு சென்றால் என்று தெரியவில்லை, எனவே இதுகுறித்து போலீசாரிடம் மணமகன் ஷியாம்பாபு புகார் கொடுத்துள்ளார்.