காஞ்சிபுரம்: அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இது தொடர்பாக அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என மக்கள் ஓட்டளித்தார்கள். ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து நடைபெறும். தர்மம் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவில் பிளவு கிடையாது. ஒற்றுமையாக உள்ளோம், சசிகலா சிறையில் இருந்தாலும் அவருடைய ஆசி எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.